13 வயது பாலஸ்தீன சிறுவனின் கனவைச் சிதைத்த போர்… உயிரிழந்தாலும் கனவை நனவாக்கிய பார்வையாளர்கள்! | 13 year old Palestine boy killed by Israel force in Gaza war

Screenshot 2023 12 25 14 47 30.png

மேலும், அவ்னி எல்டஸின் அத்தை அலா, “அவ்னி மகிழ்ச்சியான, தன்னம்பிக்கை கொண்ட சிறுவன். எனக்காக எப்போதும், வீட்டின் கதவைத் திறந்தே வைத்திருப்பான். அன்றைக்கு, வந்த செய்தியை முதலில் நான் நம்பவில்லை. அதன் பிறகு, எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர், சமூக வளைதளங்களில் `Rest in peace’ என என்னுடைய சகோதரரின் குடும்ப புகைப்படங்களைப் பகிர்ந்ததைக் கண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கிருந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்க்குமாறு என்னிடம் கூறினர். ஆனால், `அவர்கள் உயிரோடு இருக்கும்போது இருந்த அழகான முகங்களை நான் நினைவில் கொள்ளவேண்டும்’ என விரும்பிய என் கணவர், அதை மறுத்துவிட்டார்” என முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

அவ்னி எல்டஸ்

அவ்னி எல்டஸ்

மேலும், அன்றிரவு அவ்னி எல்டஸ் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அலா தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு காஸாவிலிருந்து இடம்பெயர்ந்த அவ்னி எல்டஸின் அத்தை மாமா, இப்போது தெற்கு காஸாவில் இருக்கின்றனர். மேலும், தற்போது அவ்னி எல்டஸ் இல்லையென்றாலும், அவரின் கனவு நிறைவேறியிருக்கிறது. அவரின் யூடியூப் சேனல் தற்போது, 1.49 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தொட்டிருக்கிட்டது. அவர்களில் பலர் அவ்னி எல்டஸின் வீடியோவின் கமெண்ட்டுகளில் இரங்கல் தெரிவித்து வருவதோடு, உயிருடன் இருந்தபோது அவ்னி எல்டஸின் இலக்கை நிறைவேற்ற முடியாமல் போனதாக மன்னிப்பும் கோரி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *