Uncategorized

ஜோதிடம்

1276808.jpg

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தவர், வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்பு தேடி வரும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். பொது காரியங்களில் ஈடுபடுவீர். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கடகம்: பூர்வீக விட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக பெரிய திட்டங்கள் தீட்டுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: எதிர்பாராத செலவு வரக் கூடும். குடும்ப உறுப்பினர் களின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது. வியாபாரத் தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவல கத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரம் உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும்.

தனுசு: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: பூர்வீக சொத்து பிரச்சினை தீர சில காலம் ஆகும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுவரக் கூடும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளின் சாதனைகளால் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *