Uncategorized

ஜோதிடம்

1276312.jpg

மேஷம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகி செலவு வைத்த வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள்.

ரிஷபம்: மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். வெகுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து

நடப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார் கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

கடகம்: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரக்கூடும். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் தோன்றி மறையும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் வேலைச் சுமை கூடும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப் பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

கும்பம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கி கடனுதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். வெளியூர் பயணங்கள் உற்சாகம் தரும்.

மீனம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *