Uncategorized

ஜோதிடம்

1261820.jpg

பொதுப்பலன்: குழந்தையை தத்தெடுக்க, புத்தகங்கள் வெளியிட, கமிஷன், உணவு வியாபாரம் தொடங்க, அழகு சாதனங்கள் வாங்க, நடனம், இசை பயில நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும்.

மேஷம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். எதிலும் நிதானம் அவசியம்.

மிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். திடீர் பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கடகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

சிம்மம்: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய அதிகாரியின் ஆதரவு உண்டு.

கன்னி: முன்பு செய்த உதவிகளுக்கு பாராட்டு கிட்டும். புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை தக்க வைப்பீர்.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பொறுப்பு கூடும்.

விருச்சிகம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

தனுசு: துடிப்புடன் காணப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்

களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மகரம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு உயரும்.

மீனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *