Uncategorized

ஜோதிடம்

1260094.jpg

பொதுப்பலன்: வாகனங்கள் பழுது நீக்க, புது பணியாட்களை வேலைக்கு அமர்த்த, செங்கல் சூளை பிரிக்க, வழக்குகள் பேசி முடிக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேகம், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு வேலைகள் விரைவில் முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையில் எடுக்காதீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நிகழும். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பொறுப்பு கூடும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்துவந்த பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: குழப்பம் நீங்கி பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு விஷயங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக் கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

துலாம்: வங்கி கடனுதவி கிடைக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். வெளியூர் பயணங்கள் உற்சாகம் தரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பொறுப்பு கூடும்.

தனுசு: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த பூசல்கள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். புதிய பதவி கிடைக்கும்.

மகரம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரி களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பொறுப்பு கூடும்.

மீனம்: பணவரவு திருப்தி தரும். உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். மகனின் கல்யாண முயற்சி பலிதமாகும். சகோதரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *