Uncategorized

ஜோதிடம்

1259109.jpg

பொதுப்பலன்: வாஸ்துபடி கட்டிடம் கட்ட, பூமி பூஜை, கிரகப்பிரவேசம், உபநயனம் செய்ய, வாகனம், நகை வாங்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: உற்றார், உறவினர் உதாசீனம் செய்வதை பொருட்படுத் தாமல் உங்கள் கடமைகள், பொறுப்புகளை முறையாக செய்யுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத் தில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

ரிஷபம்: நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில உத்திகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. புதிய பொருட்கள் சேரும்.

மிதுனம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி, அன்யோன்யம் உண்டாகும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பேச்சில் பொறுமை தேவை.

கடகம்: வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள் வீர்கள். பல வகையிலும் பண வரவு உண்டாகும். உங்களுடன் உறவாடிக்கொண்டே, உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிவீர்கள். புதிய நபர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர் கள். வீடு, வாகன வகையில் செலவு இருக்கும். தொழிலில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகள் சுமுகமாக தீரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: சந்தேகத்தால் தேவையற்ற சங்கடங்கள், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வந்துபோகும். கோபத்தை தவிருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க நேரிடும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

துலாம்: புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். விலை உயர்ந்த கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். குலதெய்வ வழிபாடு மனநிறைவை தரும்.

விருச்சிகம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். வேலைச்சுமை அதிகரிக்கும்.

தனுசு: குடும்பத்தினருடன் கலந்துபேசி சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப் பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு.

மகரம்: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். நீண்ட காலமாக இழுபறியான பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

கும்பம்: விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் பலிதமாகும். சகோதரரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *