Uncategorized

ஜோதிடம்

1258016.jpg

பொதுப்பலன்: புது ஆடை, தங்க நகைகள் அணிய, நடனம், தாள வாத்தியம் பயில, நோயுற்றோர் குளிக்க, ஆழ்துளை கிணறுகள் அமைக்க, உணவு, கமிஷன் வியாபாரம் தொடங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும்.

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். தந்தை வழியில் நிம்மதியுண்டு. வியாபாரம் சூடு பிடித்து, நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

ரிஷபம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். மனைவி, தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். பங்குதாரர்களுடன் சேர்ந்து புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் வீண் டென்ஷன் நீங்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் தடைபடும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை.

கன்னி: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய அதிகாரி உங்களை மதிப்பார்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பேச்சில் இனிமை பிறக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

விருச்சிகம்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய வழக்குகள் சாதகமாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் நன்றியுடன் இருப்பர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த முக்கிய ஆவணம் கிடைக்கும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்.

கும்பம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவீர். அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டு. பணிச்சுமை இருப்பினும் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்:பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக மன உளைச்சல், டென்ஷன் வந்து போகும். இல்லத்து பெரியவர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *