Uncategorized

ஜோதிடம்

1257444.jpg

பொதுப்பலன்: கதிரறுக்க, தானியம் சேமிக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, அதிகாரிகளை சந்திக்க, வழக்குகள் பேசி முடிக்க, சமையல், சிற்ப வேலைகள் கற்றுக் கொள்ள, அன்ன தானம் செய்ய நல்ல நாள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாகனத்தை மாற்ற வழி பிறக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி செயல்படவும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பொறுப்பு கூடும்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சூடு பிடித்து, நல்ல லாபம் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக் கூடும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பாணியாட்கள் தொந்தரவு தருவர். புதிய யுக்திகளைக் கையாண்டு, வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: அடிமனதிலிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவார்கள். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.

துலாம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள்.

விருச்சிகம்: புது புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை ஆச்சரியப்படுத்துவீர். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீட்டை அழகுபடுத்துவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். பொறுப்பு கூடும்.

தனுசு: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் நண்பர்களாவர். புதிய பதவி கிடைக்கும்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: திட்டமிட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்துமோதல்கள் வரக் கூடும். வாகனம் செலவு வைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியரை குறை கூற வேண்டாம். புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.

மீனம்: அடிமனதில் இருந்த பயம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். வாகனத்தால் இனி வீண் செலவு இருக்காது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *