Uncategorized

ஜோதிடம்

1255248.jpg

பொதுப்பலன்: ரசாயனம், மருந்து வியாபாரம் தொடங்க, வாகன பழுது நீக்க, இசை, நடனம் பயில, அதிகாரிகளை சந்திக்க, வழக்கு பேசி தீர்க்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால், தடைபட்ட வேலையை முடித்துக் காட்டுவீர்கள். சில இடையூறுகள், தடை, தாமதத்துக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். விலகி சென்ற சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பணிச் சுமை குறையும்.

மிதுனம்: எதிர்பார்த்திருந்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். பேச்சில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் திறமையாக சமாளிப்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். பொருட்கள் சேரும். வீண்செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கு கடன் உதவி கிடைக்கும். அரசு, வங்கி தொடர்பான காரியங்களில் இழுபறி நீங்கி, முன்னேற்றம் உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். வீடு, கடையை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. அவர்கள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பணம் வந்துசேரும்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். மருத்துவ செலவுகள் குறையும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் பேச்சு, விவாதங்கள் விலகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு: திடீர் வெளியூர் பயணம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார விஷயத்தில் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப்போட்டு பார்க்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகி கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கும்பம்: வீட்டில் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியோர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். விலகி சென்ற பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. தடைபட்ட கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *