Uncategorized

ஜோதிடம்

1253271.jpg

பொதுப்பலன்: தற்காப்பு கலை பயில, தானியங்களை களஞ்சியத்தில் சேமிக்க, சமையலறையை புதுப்பிக்க, அழகு சாதனங்கள் வாங்க, பழைய உறவினர், நண்பர்களை சந்திக்க நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும். தந்தையின் உடல் நிலை சீராகும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். வீண் பழிகள் வந்து சேர வாய்ப்பு உண்டு.

மிதுனம்: குழப்பம் நீங்கி மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயமும் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க புதிய வழி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கியமானவர்கள் அறிமுகமாவர். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லவும்.

கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினையில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டு. மதிப்பு, மரியாதை உயரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு உண்டு.

கன்னி: கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும். மனைவிவழி உறவினர்களிடம் மோதல் போக்கு வேண்டாம். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவிகரமாக நடந்து கொள்வார்.

துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். சகோதரர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் பங்கேற்பீர். உங்களால் ஆதாயமடைந்த சிலர் உங்களை சந்திப்பார்கள். புதிய தொழில் தொடங்குவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த வேலை தடைபட்டு முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயார், மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்கள் உதவியுடன் புதிய கிளை திறப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் மறைந்திருக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்சினை தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கும்பம்: குழப்பம் நீங்கி மனமகிழ்ச்சி ஏற்படும். மறைமுகமாக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். நண்பர்கள், தந்தைவழி உறவினர் தேடி வருவர். வியாபாரம் சூடு பிடித்து, நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் கனிவாக நடப்பார்கள்.

மீனம்: பிரபலங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *