Uncategorized

ஜோதிடம்

1248571.jpg

பொதுப்பலன்: வங்கிக் கடன் பெற, பழைய நண்பர்களை சந்திக்க, நவீன மின்னணு சாதனங்கள் வாங்க, அதிகாரிகளை சந்திக்க, புத்தகங்கள் வெளியிட ஆலோசனை கூட்டங்கள் நடத்த, அன்னதானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாயார், மனைவியின் உடல்நிலை சீராக அமையும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். கூட்டுத்தொழில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரால் ஆதாயம் உண்டு. புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.

சிம்மம்: உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

கன்னி: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவர். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். புதிய கிளை திறக்க முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரும். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய படிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி அகலும். மதிப்பு, மரியாதை உயரும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கண்டு, வெற்றி பெறுவீர். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கவுரவ பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தால் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.

தனுசு: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்களுடன் இருந்த பகை நீங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். புதிய வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து, பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். மேலதிகாரியின் பாராட்டு உண்டு.

கும்பம்: தட்டு தடுமாறி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தந்தையாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: கணவன் – மனைவிக்குள் இருந்த பனிப்போர் மெல்ல மாறும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாகனச் செலவு குறையும். அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *