Uncategorized

ஜோதிடம்

1248390.jpg

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் இப்போது சரியாகிவிடும். அதனால் மனம் நிம்மதி பெறும். பண வரவிற்கு குறைவிராது. செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதை சமாளித்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள்.

வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். தொழிலில் உற்பத்தி சுமாராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளில் இறங்குவதை சற்று தள்ளிப் போடவும். வியாபாரத்தில் முன்னேற்றம் எதையும் இந்தவாரம் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள துலா ராசி அன்பர்களின் மனதிற்கு பிடித்த வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்படும். வழக்குகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம்.

மாணவமணிகள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பெண்கள் மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படக்கூடும்.

பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், குரு – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருந்து வரும் செலவுகள் அனைத்தும் இந்த வாரம் கட்டுக்கடங்கி இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தங்களுக்கு உற்சாகத்தை தரும். தக்க தருணத்தில் பிறருக்கு தாங்கள் உதவுவது அவர்களது ஆசியும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்தவாரத்தில் எதிர்பார்க்க முடியாது சிலருக்கு தாங்களே எதிர்பாராத வகையில் ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். தொழில் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும்.

புதிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாரம் தாராளமாக மேற்கொள்ளலாம் சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீண்ட நாளைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரும்.

குடும்ப பொறுப்புகளின் காரணமாக உழைப்பு வழக்கத்தைவிட சற்று அதிகரித்து காணப்படும். அதனால் மனதில் விரக்தி உண்டாகும். மாணவமணிகள் சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்மணிகள் குடும்பத்தில் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம்.

பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களை கொண்டு குரு பகவானை வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், சனி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து வருவது அவசியம். திருமண வயதில் உள்ள தனுசு ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சி தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இவ்வாரம் சற்று கவனமாக இருந்து வருவது நல்லது.

தாங்கள் செய்த சிறு தவறை கூட சக ஊழியர்கள் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். அது மேலிடத்தில் தங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயத்தை பாதிக்கக்கூடும்.தொழிலில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சற்று பொறுமையாக இருந்து வரவும் மற்றபடி தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரவும்.

குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவன்-மனைவி இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தருணத்தில் தங்கள் மனதினை முழுவதுமாக கல்வியில் செலுத்துவது அவசியம். பெண்கள் கடின உழைப்பு ஏற்படக்கூடும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், வெள்ளி | இந்தவாரம் கிரக நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *