Uncategorized

ஜோதிடம்

1248392.jpg

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் வேற்றுமொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் தேவை. அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. சக பாகஸ்தர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு செய்து மாற்றங்களை செய்வீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

வெளிநாடு சென்று கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி ஒன்று இந்த வாரம் தேடி வரும். பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும் | அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – சுக ஸ்தானத்தில் சூரியன், குரு – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன்பு ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல்கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறுவிஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்பட்டு பேசுவதினால் பிரச்சினைகள் எழக்கூடும். பழைய கடன்களை முற்றிலுமாக அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மனவருத்தத்தை தரும். மொத்தத்தில் அதிருப்தியான வாரமிது. தொழில்துறையினர் முன்னேற்றம் அதிகமாக லாபம் என அனைத்தையும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு மறையும். கொடுக்கல்-வாங்கலில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம் அதனால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதிககவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மேற்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதை எதிர் கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது. பெண்களுக்கு பிரச்சினையில்லாத வாரம் இது.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண்தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும் | அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு, செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மீனராசி அன்பர்களே! இந்த வாரம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழில் உற்பத்தி அமோகமாக இருக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கு கிடைப்பது நிம்மதியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி துறையினருக்கும் அனுகூலமான வாரமிது.

வியாபாரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இது அமையும். புது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை அளிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

மாணவமணிகளுக்கு மனதில் ஏற்பட்டு வந்த சஞ்சலங்கள் விலகுவதால் படிப்பில் கவனம் திரும்பும். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *