Uncategorized

ஜோதிடம்

1247945.jpg

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வழக்கு பேசி முடிக்க, கோயில்களில் உழவாரப் பணி செய்ய, விவாதங்களில் கலந்து கொள்ள, வியாபாரக் கணக்கு முடிக்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முடிவு செய்வீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். மனைவி, தந்தையின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் மேல்படிப்பு விஷயமாக அலைய வேண்டியிருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

கடகம்: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். புதிய கிளை திறப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

சிம்மம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி அகலும். மதிப்பு உயரும்.

கன்னி: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் விலகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலாம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

விருச்சிகம்: புதுப் புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். பணிச்சுமை குறையும்.

தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். விருந்தினர் வருகை உண்டு. பணவரவு அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மகரம்: பிள்ளைகளின் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் இருக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிக்க நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்புகள் வந்து போகும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்கவும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் வருவார்கள். புதிய கிளை திறப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கு மதிப்பு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மீனம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பணவரவு உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்லவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *