Uncategorized

ஜோதிடம்

1247849.jpg

பொதுப்பலன்: சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேச, முத்து, சங்கு சேகரிக்க, மிருதங்கம், தாளம் பயில, அதிகாரிகளை சந்திக்க, வங்கிக் கடன் பெற, செங்கல் சூளை பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும்.

மேஷம்: செலவுகள் கட்டுக்குள் வரும். சவாலான காரியங்களை யும் சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் நன்மைகள் ஏற்படும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கடகம்: இன்று பிற்பகல் 3.25 மணி வரை சந்திரன் ஆயில் யத்தில் இருப்பதால் முன்கோபம், அலைச்சல் இருக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கக் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

சிம்மம்: இன்று காலைப்பொழுதில் மனநிம்மதியுடன் இருப்பீர்கள். ஆனால் பிற்பகல் 3.25 மணி முதல் சந்திரன் மகத்தில் நுழைவதால் தேவையற்ற பிரச்சினைகள், காரியத் தடை ஏற்படக் கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கன்னி: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பணவரவு உண்டு. குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: சொந்தபந்தங்களிடையே மதிப்பு மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். மூத்த சகோதர சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். விஐபியுடன் சந்திப்பு நிகழும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மூத்த சகோதரருடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

தனுசு: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை, ஆலோசனையை நாடுவார்கள்.

மகரம்: இன்று சந்திராஷ்டம் பிற்பகல் 3.25 மணி வரை உத்திராடத்திலும், அதன் பிறகு திருவோணத்திலும் தொடர்வதால் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்்கள், மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு. குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்று வீர்கள். முக்கியப் பிரமுகருடன் சந்திப்பு நிகழும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *