Uncategorized

ஜோதிடம்

1246859.jpg

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் செய்ய, வியாபாரம் தொடங்க, சொத்து பத்திரப் பதிவு செய்ய, குழந்தைக்கு காது குத்த, நகை வாங்க, கதிரறுக்க, புது வேலையில் சேர நன்று. சிவன் கோயில்களில் சிவஸ்துதி படித்து, அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து, அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய உத்திகளை கையாள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: தடைபட்ட திருமண முயற்சிகள் கைகூடி வரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. அவர்களது வருங்கால வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. முன்கோபத்துக்கு இடம்தராதீர்கள். தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் காரியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு, அவர்களுடன் நெருக்கமாவீர்கள். ஆன்மிகம், தியானம் போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட பணியாளர்களை மாற்றுவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: நீண்ட நாளாக இழுபறியாக உள்ள பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான மாற்றுவழியை கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: உங்களது வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறைந்து, அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து மனதுக்கு இதமான செய்தி கிடைக்கும். உடல் சோர்வு, வயிற்றுவலி சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள்.

தனுசு: பணம், முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் நேர்முக, மறைமுக போட்டிகள் இருந்தாலும், திறமையாக சமாளிப்பீர்கள். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மகரம்: மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவிகள் கிடைக்கும். வீடு, வாகன வகையில் தேவையற்ற செலவுகள் நீங்கும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பதால், ஆதாயம் உண்டு.

கும்பம்: வெளி வட்டாத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். நீண்ட காலத்துக்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்கும். மகான்கள், பெரியவர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். எதிலும் பொறுமை தேவை.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *