Uncategorized

ஜோதிடம்

1243882.jpg

பொதுப்பலன்: தற்காப்பு கலைகள் பயில, ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள, அடுப்பு அமைக்க, மின்சார சாதனங்கள் வாங்க, கண் திருஷ்டி கழிக்க, சமையல் கற்றுக் கொள்ள, நவகிரக சாந்தி செய்ய நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: தேவையற்ற முன்கோபம், டென்ஷன் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான செலவு வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு வேண்டாம்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினையை சுமுகமாக முடிக்கப் பார்க்கவும். எதிலும் நிதானம் தேவை. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்புகளும் கூடும்.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். சகோதரர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்து பிரச்சினையை தீர்ப்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் செய்ய முயற்சிப்பீர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

தனுசு: மனக்குழப்பம் நீங்கி பேச்சில் தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர். வாகனம் செலவு வைக்கும். சகோதரியின் வீட்டு விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரத்தில் மேன்மை உண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியருடன் இணக்கமாக செல்லவும்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் கூடும்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வங்கிக் கடனை பைசல் செய்வீர். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *