Uncategorized

ஜோதிடம்

1243310.jpg

பொதுப்பலன்: மருந்துண்ண, மூலிகை பறிக்க, புனித நதிகளில் நீராட, வைத்திய தொழில் தொடங்க, தீட்சை பெற, செல்லப் பிராணிகள் வாங்க, பரிகார பூஜை, அன்னதானம் செய்ய நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணவரவு ஓரளவு திருப்தி தரும். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களுடன் சேர்ந்து கடையை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் . யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியுண்டு. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் இனி ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய திட்டத்துக்கு நீங்கள் தலைமையேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படவும். பழைய வாகனத்தை மாற்றுவீர். புதிய பங்குதாரரை சேர்க்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும்.

துலாம்: திடீர் பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் சூடுபிடித்து லாபம் பார்க்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தையும் முடிப்பீர். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஆவணம் கிடைக்கும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தை புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மீனம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தை புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *