Uncategorized

ஜோதிடம்

1239792.jpg

பொதுப்பலன்: தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, சமையலறை, மின்சார சாதனங்கள் வாங்க, கண் திருஷ்டி கழிக்க, தற்காப்பு கலைகள் பயில, நவகிரக சாந்தி செய்ய, ரத்தினங்கள் அணிய நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். வாகனம் செலவு வைக்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொழிலில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மேலதிகாரியின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு அதிகரிக்கும். தேவையற்ற குழப்பங்கள் நீங்கி கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாயுக் கோளாறால் உடல் உபாதைகள் வந்துபோகும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார்.

கடகம்: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்கள் ஆவர். அலுவலக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பர். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

சிம்மம்: பழைய சொத்து வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். மற்றவர்களை நம்பி சில வேலைகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கன்னி: இரண்டு மூன்று நாட்களாக முடியாமலிருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் இணக்கமான போக்கைகடைபிடிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு. புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக அலுவலகத்தில் தேடிக் கொண்டிருந்த ஆவணம் கைக்கு கிடைக்கும்.

விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனது மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கூட்டுத் தொழிலில் லாபமுண்டு. மகனின் உயர்கல்வி விஷயமாக டென்ஷன் வந்து போகும். வாகனத்தை சீர் செய்வீர். சிலர் புதிது வாங்குவீர்.

தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் சக போட்டியாளர்களை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். நிம்மதி பிறக்கும்.

மகரம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். முன் கோபத்தை தவிர்க்கவும். மனைவிவழி உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவர். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: வராது என்று நினைத்திருந்த பணம் வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வாகன பராமரிப்புச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *