Uncategorized

ஜோதிடம்

1238569.jpg

பொதுப்பலன்: உடற்பயிற்சி கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க, விவகாரங்கள் பேசி முடிக்க, ஆலோசனை கூட்டம் நடத்த, அதிகாரிகளை சந்திக்க நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயிலில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பல வகையிலும் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகன பழுதை சரிசெய்வீர்கள்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். தங்க நகைகளை கவனமாக கையாள்வது அவசியம். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

மிதுனம்: புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையற்ற அச்சம், குழப்பங்கள் விலகும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு, வங்கி தரப்பில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்திருக்கும் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாட்களாக தொல்லை தந்த வாயு கோளாறு, சளி தொந்தரவுகள் நீங்கும்.

கன்னி: விலகி சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள். பண வரவு, பொருள் வரவு உண்டு.

துலாம்: எதிர்மறையான எண்ணங்கள் மறையும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு மறைந்து, நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.

விருச்சிகம்: வீண் கவலை, அச்சம், குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பல வகையில் பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி, சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்.

தனுசு: குடும்பத்தில் இருந்த கவலை, குழப்பங்கள் நீங்கி, அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். பயணத்தின்போது அதிக கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் தக்க சமயத்தில் ஆதாயம், அனுகூலம் கிடைக்கும். தொண்டை புகைச்சல், வயிற்று வலி விலகும். பல வகையிலும் பண வரவு உண்டாகும்.

கும்பம்: கணவன் – மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். வீண் குழப்பங்கள் விலகும். திடீர் பண வரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மீனம்: குழப்பங்கள் நீங்கி தெளிவும், உற்சாகமும் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். உங்கள் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *