Uncategorized

ஜோதிடம்

1237177.jpg

பொதுப்பலன்: வியாபாரக் கணக்கு முடிக்க, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, பழைய வீட்டைப் புதுப்பிக்க,யோகா, தியானம் பயில, பணியாட்களை சேர்க்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் பிரச்சினை தீரும். பெற்றோரின் ஆலோசனை கேட்டு செயல்படவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்கள் வரும். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். வீண் சந்தேகம், மனஸ்தாபங்கள் நீங்கி கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார்.

கடகம்: நீண்ட நாள் சந்திக்காமல் இருந்த நண்பர்கள், உறவினரை சந்திப்பீர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். வாகனம் சீராகும். அரசியல் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். வீண் விவாதம் தவிர்க்கவும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு இருக்கும்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்கவும்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். உடன் பிறந்தவர்கள் ஆதரவுடன் பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். மனஸ்தாபங்கள் நீங்கி தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்: மற்றவர்களுக்கு எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். திடீர் செலவுகள் கூடும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். பழைய வாகனத்தை விற்க திட்டமிடுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பொறுப்புகள் கூடும்.

தனுசு: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். தாய்வழி, மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரம் தொடர்பாக திடீர் வெளியூர் பயணங்கள் இருக்கும். அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களில் கவனம் தேவை.

மகரம்: குழப்பங்கள் விலகி நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி கிடைக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கும்பம்: முகப் பொலிவு கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். புது வாகனம் வாங்குவீர். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும். வெளியூர் பயணம் சாதகமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். வீண் பேச்சை குறைத்தால் அலுவலகத்தில் நற்பெயர் உண்டு.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *