Uncategorized

ஜோதிடம்

1235894.jpg

பொதுப்பலன்: வாகனம், மின்சாரம், மரச் சாமான்கள் வாங்க, வழக்கு பேசி தீர்க்க, கடன் பைசல் செய்ய, வியாபாரக் கணக்குகள் முடிக்க, நீர்நிலைகளை சுத்தப்படுத்த நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். மன நிம்மதி பிறக்கும். வாகனச் செலவு இருக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பெரிய பொறுப்புகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருவாயைப் பெருக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் நிம்மதி உண்டு. பணப் புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். அதிரடியான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

தனுசு: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களின் ஆதரவால் மன நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

கும்பம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர், பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை

செய்வீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். பெற்றோரின் உடல்நலம் சீராகும். உத்தி

யோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். அனைவரையும் அனுசரித்து செல்லவும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *