Uncategorized

ஜோதிடம்

1234805.jpg

உள்ளத்தில் அழுதா லும், உதட்டால் சிரிப்ப வர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்கிறார். குரு 4-ம் வீட்டில் அமர்வதால் கடந்த ஓராண்டை விட இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் இனி நீங்கும். உங்களுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். இடமாற்றமும் இருக்கும்.

வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். உங்கள் பலத்தை புரிந்துக் கொள்வீர்கள். கணவருக்கும் உங்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்த சிலர் முயல்வார்கள். விட்டுக் கொடுத்து போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மனத்தாங்கலும் வந்து நீங்கும்.

சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் போகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாத்தனார், மாமியார் வகையில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். எரிவாயு குழாயை மாற்றுவது நல்லது. மற்றவர்களின் பெயர்களில் உள்ள வாகனத்தை பயன்படுத்த வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். மனைவி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியா பாரத்தில் பங்குதாரர்களுடன் பகை வந்து நீங்கும்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடிக் கொண்டே போகும். சின்ன சின்ன விபத்துகள் ஏற்படக் கூடும். வயிற்றுவலி, யூரினரி இன்பெக்ஷன், நெஞ்சுவலி வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலை கழிக்கப்படுவீர்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். வம்பு சண்டைகள் வரும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை மாறுவீர்கள். மறைமுக எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள்.

குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக் காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடி யும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்ற வர்களை அனுசரித்துப் போகவும். தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். திடீர் லாபம் உண்டு. புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் எவ்வளவு தான் உழைத்தா லும் ஓர் அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல் லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சில மாதங்கள் கழித்து புதிய பொறுப்புகள் கூடும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும், பணப் பற்றாக்குறையையும் தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவடிவுடையம்மன் ஆலயத்துக்கு முன்பு உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *