Uncategorized

ஜோதிடம்

1231192.jpg

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் செய்ய, தாலிக்கு பொன் உருக்க, குழந்தைக்கு பெயர் வைக்க, வியாபாரம், வங்கிக் கணக்கு தொடங்க, நகைகள் வாங்க, பத்திரப் பதிவு செய்ய நன்று. சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல சேதி, வெளியூரில் இருந்து வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். அதனால் ஆதாயமும் உண்டு. உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும்.

மிதுனம்: தேவையற்ற அச்சம், கவலை, மன இறுக்கம், குழப்பங்கள் வந்து நீங்கும். எந்த வேலையையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்யாதீர்கள். குடும்பத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கடகம்: எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் உறுதி, மனப் பக்குவம் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, உற்சாகம், புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் மன நிம்மதி ஏற்படும்.

கடகம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் உறுதி, மனப் பக்குவம் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, உற்சாகம், புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் மன நிம்மதி ஏற்படும்.

துலாம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: உங்கள் கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய பதவிகள், பெரிய பொறுப்புகள் தேடிவரும். ஆன்மிக நாட்டம் கூடும்.

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு விலகி, சுமுக நிலை உண்டாகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் உடனடியாக விற்றுத் தீரும்.

விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள்.

தனுசு: வெளி வட்டாரத்தில் யாரிடமும் அநாவசிய பேச்சுகள் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய நபர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்: உங்களிடம் இருந்த சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் தேவையற்ற அலைச்சல், அசதி, செலவு ஏற்படக்கூடும்.

மீனம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல்கள் விலகும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *