Uncategorized

ஜோதிடம்

1230110.jpg

பொதுப்பலன்: வாகனம் விற்க, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ஆழப்படுத்த, சிலை அமைக்க, மல்யுத்தம் கற்க, ரகசியங்களை வெளியிட, காவல், வன தெய்வங்களை வணங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தாயார், மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தடைபட்ட காரியங்களை மன வலிமையுடன் முடித்து காட்டுவீர். பழைய வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றுவீர். வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்: உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். தாய்வழி சொத்துப் பிரச்சினை தீரும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டு.

கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். அக்கம் பக்கத்தி

னருடன் அளவாகப் பேசி பழகவும். வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.

சிம்மம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

கன்னி: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெருகும்.

துலாம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு, வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

விருச்சிகம்: தம்பதிக்குள் வாக்குவாதம் வந்து போகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். மனைவிவழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தபடி இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

தனுசு: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறை வேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

மகரம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். நீண்ட நாளாக பேசாது இருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்து உங்களிடம் பேசுவர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரி ஆதரவு தெரிவிப்பார். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும்.

கும்பம்: எடுத்த வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். பழைய வாகனம் செலவு வைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

மீனம்: நேர் கொண்ட பார்வையுடன், திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வெளியூர் பயணம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது நல்லது.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *