Uncategorized

ஜோதிடம்

1229685.jpg

பொதுப்பலன்: அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில, சமையலறையை புதுப்பிக்க, கிழங்கு, கரும்பு நட, நந்தவனம் அமைக்க, ஆலோசனைகள் நடத்த நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகா லட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த வந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையிடத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையை பெற்று உயர்வீர்கள்.

ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவர்.

மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். பழைய வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி முன்னேற்றம் இருக்கும். யாருடைய ஆலோசனையும் இன்றி, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும்.

கடகம்: கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பூர்வீக விட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் அன்யோன்யம் ஏற்படும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள்.

துலாம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வாகனம் செலவு வைக்கும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அன்பாக பேச வேண்டும். புதிய பங்குதாரர் கிடைப்பார்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அலுவலக ஊழியர்களிடம் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும்.

தனுசு: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் நிம்மதியுண்டு. பழைய வழக்குகள் சாதகமாகும். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர். புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். ஓரளவு லாபம் கிடைக்க வழி உண்டு.

மகரம்: பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். அக்கம்

பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை கவர்வது அவசியம். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

கும்பம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியமெல்லாம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்கள் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *