Uncategorized

ஜோதிடம்

1229321.jpg

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் அவர் மிதமான வளர்ச்சி என்பது இருக்கும் உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். ஆடி மாதத்திற்கு பிறகு வரக்கூடிய காலகட்டங்களில் வெளிநாடு வாய்ப்புகள் கைகூடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வளர்ச்சி உங்களுக்கு வந்து சேரும்.

குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு விவாதத்தில் அல்லது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மிகப் பெரிய லாபங்களை இந்த வருடம் எங்கள் பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவியிறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும் நீங்கள் உழைத்த உழைப்புக்கு ஏற்ற மதிப்பு மரியாதை சொல்வாக்கு செல்வாக்கு ஆகியன உயரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. கல்வியில் இருந்த பொருளாதார தடைகளை அகற்றுவார்கள். படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வருடம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

பூசம்: இந்த வருடம் குடும்பத்தில் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.

ஆயில்யம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மனை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் – சுக்கிரன் – குரு | எண்கள்: 2, 3, 6

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) மற்றவர்களை மதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த ஆண்டு எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு தொழிலில் நல்ல ஏற்றம் பொருளாதார முன்னேற்றம் காண பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலிடத்திலிருந்து வந்த உரசல்கள் அகலும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய அற்புதமான வேலை கிடைக்கும்.

கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். குடும்பத்தில் எந்த ஒரு வாக்குவாதம் ஏற்பட்டாலும் அமைதியான முறையில் கையாள்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. சுப காரியங்கள் நல்லபடியாக நடைபெறும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு சாதனைகள் புரிய முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பது அவசியம்.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றங்களை பெறுவீர்கள் எதிர்பார்க்கக்கூடிய மதிப்பெண்கள் உங்களுக்கு கிடைக்கும்

மகம்: இந்த வருடம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பூரம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் தனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – குரு – செவ்வாய் | எண்கள்: 1, 3, 9

கன்னி ( உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) புத்தியும் பக்தியும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த ஆண்டு புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும். உங்களது உழைப்பினால் எந்த ஒரு கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ஆலோசனை செய்து பின் முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. நீண்ட காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்க்க கூடிய நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. கல்வியில் இதுவரை இருந்த தடைகளை தகர்த்தெறிந்து புதிய திசையை நோக்கி செல்வீர்கள்

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அஸ்தம்: இந்த வருடம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சனி – சுக்ரன் | எண்கள்: 5, 6, 8

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *