Uncategorized

ஜோதிடம்

1229260.jpg

பொதுப்பலன்: காட்டு மூலிகை சேகரிக்க, கடன் தீர்க்க, வாஸ்துபடி வீட்டை சீரமைக்க, சிற்ப சாஸ்திரம் பயில, அதர்வண வேதம் அறிந்து கொள்ள, சித்தர்களை தரிசிக்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வரும். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வீர்கள். பணவரவு மனநிறைவை தரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நன்மை தரும்.

ரிஷபம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும். பூர்வீக சொத்து விஷயத்தில் சகோதரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் போராட்டம் உண்டு. சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்கள் செய்ய வேண்டாம்.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பங்குதாரர்களின் உதவியுடன் புதிய இடங்களில் கடை திறப்பீர்கள்.

கடகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். புதிய வேலையாட்களை சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி, மனைவிவழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

கன்னி: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவிகரமாக செயல்படுவார்கள்.

துலாம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்க்கவும். தொழிலில் நிதானம் தேவை. பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய யுக்திகளைக் கையாண்டால் மட்டுமே போட்டியாளர்களை வெல்ல முடியும்.

விருச்சிகம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பணவரவால் மனநிம்மதியுண்டு. கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். கவனம் தேவை.

தனுசு: உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. அழகு, இளமை கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குழப்பங்கள் நீங்கி கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். மனம் விட்டுப் பேசினால், பாதி குழப்பங்கள் தீர்ந்து நன்மை ஏற்படும்.

கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். யாருடனும், எதற்காகவும் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

மீனம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்துப் பேசுவார். பணவரவு திருப்தி தரும். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினருடன் தேவையற்ற பேச்சு, விவாதங்களைத் தவிர்க்கவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *