Uncategorized

ஜோதிடம்

1228795.jpg

பொதுப்பலன்: வெற்றிலை, கரும்பு பயிரிட, சொத்து விவகாரங்கள், வழக்கு பேசித் தீர்க்க, வியாபார விஷயம் பேச, வீடு மனை விற்பதற்கு முன்பணம் பெற, மின்னணு சாதனங்கள் வாங்க, முத்து, சங்கு சேகரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல்களும், செலவுகளும் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து செல்லவும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்து வந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு திருப்தி தரும்.

கடகம்: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள்.

சிம்மம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். தாயாரின் உடல்நலம் சீராகும். பழைய வழக்குகள் சாதகமாகும்.

கன்னி: எதிர்மறை எண்ணங்கள் வரக் கூடும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல்நலத்

தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும்.

விருச்சிகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பழைய பாக்கிகள் வசூலானதால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர். மனைவிவழி உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் லாபம் தரும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரரீதியாக சில மாற்றங்களை செய்வீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *