Uncategorized

ஜோதிடம்

1226790.jpg

பொதுப்பலன்: எல்லை, காவல் தெய்வத்தை வணங்க, தங்க நகை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, நெற்பயிர், செடிகளுக்கு உரமிட, விவாதங்களில் கலந்து கொள்ள, சித்தர் பீடத்தை வழிபட, மருந்துண்ண, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் தேங்கியிருந்த பணிகள் விரைந்து முடியும்.

ரிஷபம்: வழக்குகள் சாதகமாகும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதால் ஆதாயம் உண்டு. வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும்.

கடகம்: உங்களை அறியாமல் தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பிறர் மனது காயப்படும்படி பேசாதீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கி மன நிம்மதி ஏற்படும். முன்கோபம், டென்ஷன் விலகும்.

சிம்மம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படப் பாருங்கள். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.

துலாம்: வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: நேர்மறை சிந்தனைகள் உற்சாகத்தை தரும்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார ரீதியாக பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: மனதுக்கு இதமான செய்திகள் வரும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மகரம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட குழப்பம் தீரும்.

கும்பம்: குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் நிகழும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் வரக் கூடும். அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அருமை புரியும். புதிய பொறுப்பு, பதவி உங்களைத் தேடி வரும்.

மீனம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். தம்பதிக்குள் இடையே இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *