Uncategorized

ஜோதிடம்

1218400.jpg

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது – என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

சித்திரை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

சுவாதி: இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் வேலைகளை செய்வது அவசியம்.

விசாகம்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் பேச்சு திறமையால் வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம்: இந்த வாரம் சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மனநிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

அனுஷம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

கேட்டை: இந்த வாரம் குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்பச் செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மூலம்: இந்த வாரம் அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பூராடம்: இந்த வாரம் பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள்.

உத்திராடம்: இந்த வாரம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *