Uncategorized

ஜோதிடம்

1218405.jpg

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

உத்திராடம்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேலதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

திருவோணம்: இந்த வாரம் வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

அவிட்டம்: இந்த வாரம் மேலதிகாரி, சக ஊழியர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண்குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல்துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும்.

அவிட்டம்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

சதயம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி: இந்த வாரம் அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சூரியன், புதன், ராகு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல்நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். அரசியல்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி: இந்த வாரம் கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது.

உத்திரட்டாதி: இந்த வாரம் எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும்.

ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும்.

பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *