`உங்களுக்கு தருவதில் பிரச்னை இல்லை; ஆனால்..!’ – விசிக இரண்டில் சமாதானம் ஆனது எப்படி? | Constituency allocation, Did the VCK get what it asked for?

1709965299 Ghkxmqyxuaez8t8.jfif .png

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் வி.சி.க-வுடன் மட்டும் முதற்கட்டப் பேச்சுவார்த்தையே இழுத்தடித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கத் வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்றுவிட்டதால் பேச்சுவார்த்தை கொஞ்சம் தள்ளிப்போகிறது என்றார்கள். ஆனால், முதல்வர் அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாலேயே பேச்சுவார்த்தை தள்ளிப்போனதாகவும் சொல்லப்பட்டது.

சொன்னபடியே முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். அப்போது சிதம்பரம், விழுப்புரம், காஞ்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தனித் தொகுதிகளையும் இரண்டு பொதுத் தொகுதிகள் அடங்கிய லிஸ்ட்டையும் கொடுத்து அதில் நான்கு தொகுதிகளை ஒதுக்கச் சொல்லி தி.மு.க தலைமையிடம் கேட்டது வி.சி.க.

திருமா மணிவிழாவில் ஸ்டாலின்

திருமா மணிவிழாவில் ஸ்டாலின்

ஆனால், அப்போதே இரண்டே இரண்டு தொகுதிகள்தான் இரண்டும் தனித்தனிதொகுதிகளாக வேண்டுமா அல்லது ஒரு தனி, ஒரு பொது தொகுதியாக வேண்டுமா எனக் கேட்கப்பட்டது. ஆனால், இரண்டு தனி, ஒரு பொதுத்தொகுதி ஒதுக்க வேண்டும் எனத் தீவிரமாக இருந்தது விசிக. ஆனால், இறுதியாக இரண்டு தொகுதிகள் அதுவும் விழுப்புரம், சிதம்பரம் என்ற இரண்டு தொகுதிகளுக்குள் சுருக்கிக்கொண்டது தி.மு.க. இது குறித்துப் பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு கடந்த தேர்தலின்போது கையாளப்பட்ட பகிர்வுமுறைக்கு வி.சி.க உடன்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

நான்கு கேட்டு, மூன்றில் முரண்டு பிடித்து, இரண்டில் வி.சி.க சமாதானம் ஆனதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். “நாங்கள் மூன்று தொகுதிகள் என்பதில் உறுதியாகத்தான் இருந்தோம். ஆனால், முதல்வரே நேரடியாக எங்களிடம் பேசினார். ‘உங்களுக்கு மூன்று கொடுப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், உங்களுக்குக் கூடுதலாக ஒதுக்கினால், மற்றவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள். இது கூட்டணிக்குள் தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கும். எனவே, நீங்கள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

முத்லவரே இப்படிச் சொன்ன பிறகு அதை எங்களால் மறுக்க முடியவில்லை. கூடுதலாக இடங்களைப் பெற வேண்டும் எனப்தைவிட இந்தியா கூட்டணியாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. எனவே, நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்” என்றார் பேச்சுவார்த்தையில் உடனிருந்த வி.சி.க சீனியர் ஒருவர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *