`4 தொகுதிகள் கேட்டோம்… எனினும் இரண்டில் ஒப்புக்கொண்டது ஏன்?’ – விளக்கும் விசிக தலைவர் திருமாவளவன்

Whatsapp Image 2023 11 11 At 12 43 36 4 .jpeg

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதில், இந்திய யூனியன் முஸ்லிக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு இடங்களும் தி.மு.க சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்தது.

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

இத்தகைய சூழலில், ம.தி.மு.க-வுக்கு தி.மு.க இன்று ஒரு தொகுதி ஒதுக்கியிருக்கிறது. இதுகுறித்து பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும், மாநிலங்களை சீட் பேச்சுவார்த்தை பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், வி.சி.க-வுக் கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்தமுறை இரண்டு இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், “தி.மு.க-வும், வி.சி.க-வும் கலந்து பேசியதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பிற கூட்டணிக் கட்சிகளின் இறுதி தொகுதிப் பங்கீட்டுக்கு உட்பட்டு இது உறுதிசெய்யப்படும். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தோம். பின்னர், 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு வலியுறுத்தினோம்.

திருமாவளவன்

அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு கடந்த தேர்தலின்போது கையாளப்பட்ட பகிர்வுமுறைக்கு வி.சி.க உடன்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இரண்டு தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடும். அதுவும், பானைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம் என்பதை ஏற்கெனவே உறுதிசெய்திருக்கிறோம். பொதுச் சின்னம் கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறோம்.

திருமாவளவன்

தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவதற்கு தி.மு.க உடன்பாடு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா 3 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். ஆந்திராவில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. தி.மு.க எங்களுக்குத் தொகுதிகளைக் கொடுத்தது, நாங்கள் வாங்கிக்கொண்டோம் என்பதை விட, நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பகிர்ந்து கொண்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை. வேட்பாளர்கள் யார் என்பதை உயர்நிலைக் குழு கூட்டம் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்டும்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *