`வேறு எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களில் இனி சரணடைய முடியாதா?’ – சென்னை உயர் நீதிமன்றம் சொல்வதென்ன? | chennai high court issues new order regarding the surrender in murder cases

651be098b9f86.jpg

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், “கொலை வழக்குகளில் சரணடைபவர்கள், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களில்தான் சரணடைய வேண்டும் என்றால், அது சரணடைபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தும்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

மேலும் இதனால் நீதிமன்ற வளாகங்களில் தேவையில்லாத பிரச்னைகளுக்கு அது வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இனி கொலை வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைவது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பித்திருக்கிறேன். அதன்படி கொலை வழக்குகளில் நீதிமன்றத்தில் சரணடையும்போது, சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்ட்ரேட் முன்பு, தாக்கல் செய்யும் சரண்டர் மனுக்கள் இனி விசாரணைக்கு உகந்ததல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *