`மேற்குவங்க சம்பவத்துக்கு போராடிய பாஜக, புதுச்சேரி சிறுமி கொலையில் அமைதியானது ஏன்?’ – நாராயணசாமி | Narayanasamy blams BJP women’s team for not conducting bandh to the massacre of the girl

Img 20240305 Wa0106.jpg

எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ரெஸ்டோ பார்களை திறந்து, இளம் பிள்ளைகளை சீரழிக்கும் வேலையை என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் கொலை நகரமாகி வருகிறது. ரெளடிகள் அதிகரித்துவிட்டார்கள். மக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகளை மிரட்டி ரவுடிகள் மாமூல் கேட்டுகிறார்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். ஆனால், இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திலேயே ரெளடிகள் இருப்பதுதான் அதற்குக் காரணம். ரெளடிகளின் உறைவிடமாக பாஜ.க வந்துவிட்டது. ரெளடிகள் பா.ஜ.க-வில் இணைந்தால் புனிதமாகி விடுவார்கள். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று தாய்மார்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா கூட்டணி நம்பிக்கை ஊட்ட வேண்டும். குஜராத்தில் இருந்து ஹெராயின், பிரவுன் சுகர், கஞ்சா கொண்டு வரப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி சிறுமி கொலை

புதுச்சேரி சிறுமி கொலை

இதற்கு பா.ஜ.க-தான் பின்னணி. தனிப்படை போட்டு கஞ்சாவை தடுக்க வேண்டும் என்றோம். அதையும் கேட்கவில்லை. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சா போதையில் கொலை செய்கிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு கும்மாளம் போடும் இடமாக ரெஸ்டோ பார்கள் உள்ளன.  இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையை முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் ஏற்படுத்தியுள்ளார்கள். மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்காக, மம்தா பேனர்ஜியை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிர் அணி போராட்டம் நடத்தியது. ஆனால் புதுச்சேரியில் சிறுமி படுகொலைக்கு ஏன் பா.ஜ.க போராட்டம் செய்யவில்லை ? இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *