புதுச்சேரி: `அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தலைவிரித்தாடும் கஞ்சா..!’- ஆசிரியர் கூட்டமைப்பு அச்சம் | govt school teachers expressed their fear over ganja usage by students

4ce6addc 530b 4099 9b0c 4f57dea3ad9e.avif .png

 புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு அனைத்து ஒருங்கிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்குமார், பேராசிரியார் கலைவாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், “புதுச்சேரியில் முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கஞ்சா போதை ஆசாமிகளால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

மாணவர்கள் |கோப்புப் படம்

மாணவர்கள் |கோப்புப் படம்

இது போன்ற நிகழ்வு இனிமேல் எந்த பள்ளி மாணவிக்கும் நடக்கக் கூடாது. அதற்கான கடுமையான நடவடிக்கைகளில் புதுவை அரசு ஈடுபடவேண்டும். பல அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவர்களிடம் ஆசிரியர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர்கள் இன்னல்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இது குறித்து மாணவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து விடுவித்து, மற்ற மாணவர்களை பாதுகாத்து நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து மாற்றுக் கல்வி முறையில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் கல்வித்துறையில் மாணவர்களின் போதை பழக்கங்களை கட்டுப்படுத்த ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கான அதிகாரத்தை அனைத்து வகைகளிலும் அதிகப்படுத்த வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *