“ஆமாம், எனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க விரும்புகிறேன்!” – உத்தவ் தாக்கரே ஓப்பன் டாக்

159.jpg

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணிகள் இன்னும் தொகுதி பங்கீட்டை முழுமையாக முடிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

உத்தவ் தாக்கரே தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தாராசிவ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, ”ஆமாம் எனது மகனை முதல்வராக்க விரும்புகிறேன். அதற்கு அவனை நீங்கள் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க தனது கஜானாவை நிரப்பிக்கொண்டு விட்டது. பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் தேர்தல் பத்திரங்களின் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பா.ஜ.க அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளது.

பா.ஜ.க தனது 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் அதிக அளவில் கொள்ளையடித்துள்ளது. காங்கிரஸால் ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்ட முடிந்தது. ஆனால் பா.ஜ.க ரூ.7,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளது. அரசியல் கட்சிகளை உடைக்க பா.ஜ.க விடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள்”என்று குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் மத்திய அமைச்சர் அமித் ஷா சத்ரபதி சாம்பாஜி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாரிசு அரசியல் குறித்து விமர்சனம் செய்துவிட்டு சென்று இருந்தார். அவர் சென்ற அடுத்த ஒரிரு நாளில் உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் பவார் அணிக்கு சரத்ப வார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு அஜித் பவார் அணியினர் கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு போன் செய்தும், நேரடியாகவும் சென்று தங்களது அணிக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். சிலரை மிரட்டவும் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. புனே அருகில் உள்ள லோவானாலாவில் சரத் பவார் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அஜித் பவார் அணியை சேர்ந்த சிலர் மீண்டும் சரத் பவார் அணிக்கு திரும்பினர். அவர்கள் சரத் பவாரிடம் அஜித் பவார் ஆதரவு உள்ளூர் எம்.எல்.ஏ. சுனில் செல்கே தங்களை மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தனர்.

இதற்கு பதிலளித்த சரத் பவார்,” உங்களை யார் எம்.எல்.ஏ.வாக மாற்றினார்கள். உங்களுக்காக யார் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டது. தேர்தலில் போட்டியிட யார் சீட் கொடுத்தது. இன்றைக்கு அவரது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். இது ஒரு முறை நடந்துவிட்டது, அது போதும். அது மீண்டும் நடந்தால், மிரட்டல் விடுப்பவர்கள் என்னை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட பாதையில் நான் செல்வதில்லை. ஆனால் நான் அந்த பாதையில் செல்ல வற்புறுத்தினால், நான் அவர்களை விட்டு வைக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.

அஜித் பவார் சரத் பவார்

இது குறித்து சுனில் செல்கே கூறுகையில்,” நான் யாரையும் மிரட்டவில்லை. இது போன்ற புகார்களை ஆய்வு செய்த பிறகு என் மீது இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறவேண்டும். சரத் பவார் மீது நான் அதிக மரியாதை வைத்திருக்கிறேன். என் மீதான புகார் குறித்து விசாரித்து விட்டு பேசியிருக்கவேண்டும். நான் என் மீதான புகாருக்கு சரத் பவாரிடம் ஆதாரங்களை கேட்பேன். அவர் ஆதாரங்களை கொடுக்கவில்லையெனில் மாநிலம் முழுவதும் சென்று என் மீது சரத் பவார் வீண் பழி சுமத்துவதாக பிரசாரம் செய்வேன் என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *