“7 சீட்டு, 8 சீட் என்று காங்கிரஸை குறைத்து மதிப்பிட மாட்டார்கள்..!” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை | selvapperunthagai press meet in puthukottai regarding dmk allaince

Selvaperunthagai.jpg

பேச்சு வார்த்தை சுமுகமாக உள்ளது. இது தேசத்திற்கான தேர்தல். இந்த நாட்டை பாதுகாப்பதற்கான தேர்தல். பாசிச சக்திகளை அகற்றுவதற்கான தேர்தல். தமிழ்நாட்டின் மனசாட்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அவர் காங்கிரஸின் மனசாட்சியாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் செயல்படுவார். ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட மாட்டார். ஏழு சீட்டு, எட்டு சீட் என்று காங்கிரஸை குறைத்து மதிப்பிட மாட்டார்கள். விளவங்கோடு எங்களது தொகுதி தான்… அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

ஒரு பைசா கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை. பேரிடர் நிதியிலிருந்து ஒன்றிய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை. 37 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. ஒரு பைசா ஒன்றிய அரசு கொடுத்திருந்தால் வெள்ளையறிக்கை கொடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சுனாமி பேரலை வந்தது. எவ்வளவு தொகை கொடுத்துள்ளோம்.. அதனால் ஒன்றிய பா.ஜ.க அரசு யார் தமிழ்நாட்டிற்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளார்கள் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும். நிவாரணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஜி.எஸ்.டி உள்ளிட்ட பங்களிப்பு நிதியை கூட கொடுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு உள்ளது.

தமிழ்நாட்டு பணத்தை எடுத்து உத்தரபிரதேசம், அரியானா, பீகார் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு தமிழ்நாட்டின் நிதி எடுத்து கொடுக்கிறார்கள். வாக்கு சேகரிப்பதற்காக பொய் பித்தலாட்டம் செய்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியின் தலைமையே பெண்களால் அமைக்கப்பட்ட தலைமை தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தலைமை எங்களது தலைமை. காங்கிரஸ் உயிர்ப்புடனும், உயிரோட்டத்துடனும் இருக்கிறது. ஆட்சியில் இல்லை என்றாலும் பலத்துடன் இருக்கிறது. இன்னும் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். கோஷ்டி பூசலை அடையாளம் கண்டால் அனைவரும் சேர்ந்து ஒழிக்கலாம். நடப்பு காங்கிரஸ் எம்.பி-களுக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என்று கூறும் விவகாரத்தில் காங்கிரஸின் தலைமை தான் முடிவெடுக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *