வேலூருக்கு மீண்டும் கதிர் ஆனந்த்; அரக்கோணத்துக்கு வினோத் காந்தி – வாரிசுகளை இறக்கிய அமைச்சர்கள்! | ministers sons expressed their interest to contest in upcoming polls in vellore and arakanom constituencies

Whatsapp Image 2024 03 07 At 5 33 41 Pm.jpeg

இதேபோல, கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகன் வினோத் காந்தியும் அரக்கோணம் தொகுதியைக் குறிவைத்து இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார். இவர் குறித்துப் பேசுகின்றவர்கள், ‘‘வினோத் காந்தி தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு அரக்கோணம் தொகுதியின் எம்.பி-யாக வேண்டுமென்ற கனவும், ஆசையும் அதிகமிருக்கிறது.

இவருக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். ஆனாலும், 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தனக்காக விருப்ப மனு அளிக்க வைத்திருக்கிறார் வினோத் காந்தி. இந்த நிர்வாகிகள் அனைவரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். மீதமிருக்கிற ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் வினோத் காந்திக்கு மவுசு கிடையாது.

விருப்ப மனு கொடுத்த வினோத் காந்தி

விருப்ப மனு கொடுத்த வினோத் காந்தி

வினோத் காந்தியை முன்னிறுத்தும் விதமாக, அந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் அவருக்காக விருப்ப மனு கொடுக்க யாரும் வரவில்லை. அதே சமயம், சிட்டிங் எம்.பி-யாக இருக்கிற ஜெகத்ரட்சகனுக்கு கடந்த முறை 184 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த முறை அவருக்காகவும் யாரும் விருப்ப மனு கொடுக்க முன்வரவில்லை. இவர்களை தவிர ‘எம்.பி சீட்” ரேஸிலிருந்த ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதியும் இன்று காலைதான் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். ‘தனக்காக வேறு யாரும் விருப்ப மனு கொடுக்க வேண்டாம். தலைமை முடிவுக்கு கட்டுப்படலாம்’ என்று ஆதரவாளர்களிடம் ஏ.வி.சாரதி சொல்லிவிட்டார்” என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *