ரஷ்ய ராணுவத்தில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர் உயிரிழப்பு… போரில் கொல்லப்பட்டாரா?! | Indian youngster died in russia, union external ministry confirms it

Gicuzx3aiaa2cfi.jpeg

இதுகுறித்து, Indian Tech & Infra என்ற X சமூக வலைதள பக்கம், “ரஷ்யா அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற இளைஞர், உக்ரைனுடன் சண்டையிட எல்லைக்கு அனுப்பப்பட்டு போர்முனையில் உயிரிழந்தார். வெளிநாட்டில் நடக்கும் வேலை மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறது.

இதேபோல, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிவந்த குஜராத் இளைஞர் ஹேமில் அஸ்வின்பாய் மங்குகியா என்பவர், கடந்த மாத இறுதியில் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த தங்களை ஏஜென்ட் ஒருவர் ஏமாற்றி ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும், தற்போது உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் இந்திய அரசிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *