`மணிப்பூர்… ஹத்ராஸ்… பல்கீஸ் சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டீர்களா?' – பாஜக-வைச் சாடும் மம்தா!

Grgg.avif .png

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “திரிணாமுல் ஆட்சியில், பெண்கள்மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். திரிணாமுல் மிகப்பெரிய பாவம் செய்துள்ளது. சந்தேஷ்காளியில் நடந்தது யாரையும் வெட்கப்பட வைக்கும். ஆனால் திரிணாமுல் அரசு உங்கள் வலியைப் பற்றிக் கவலைப்படவில்லை.

பிரதமர் மோடி

அது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதன் மூலம் வங்காளப் பெண்களை ஒடுக்குபவரைப் பாதுகாக்க முயல்கிறது. மேற்கு வங்கத்தில் பெண்கள் கொதிப்படைந்துள்ளனர், சந்தேஷ்காளியில் தொடங்கிய இந்தப் புயல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும். திரிணாமுல் மாஃபியா ஆட்சியை அழிக்க வங்காளத்தின் நாரி சக்தி புறப்பட்டிருக்கிறது” எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில், மம்தா பானர்ஜி பெண்களின் அணிவகுப்பை நடத்துவார். ஆனால் இந்த முறை, மகா சிவராத்திரியை முன்னிட்டு, மார்ச் 7-ம் தேதி பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பா.ஜ.க தலைவர்கள் வங்காளத்தில் பெண்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறினார்கள். நான் சவால் விடுகிறேன். வங்காளத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்றபோதும், ஹத்ராஸில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்தப் பெண்ணின் உடலை அவளது பெற்றோரிடம்கூட காட்டாமல் வலுக்கட்டாயமாக எரித்தபோதும் பா.ஜ.க தலைவர்கள் எங்கே இருந்தார்கள்… பில்கிஸை மறந்துவிட்டீர்களா என்ன? கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜ் கங்கோபாத்யாய் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். அப்படியென்றால் அவர் பா.ஜ.க ஆதரவு சிந்தனையுள்ள ஒருவர் வழங்கிய தீர்ப்புகள் நியாயமாக இருக்குமென எப்படி எதிர்பார்க்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *