`பொறுமையும், அனுபவமும் வந்தால் வருகிறேன்’ – திமுக-வில் இருந்து விலகிய வேலூர் மாநகர கவுன்சிலர்! | ruling party councilor who gave a shock – what is happening in vellore city dmk?

Whatsapp Image 2024 03 06 At 10 07 25 Pm.jpeg

எதிர்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன். இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வார்டு பணிகளை மட்டுமே கவனிக்க விரும்புகிறேன். இது, எந்த சொந்த முடிவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா குமார்

மம்தா குமார்

சமீபத்தில்தான் வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் மம்தா குமார் என்பவரும் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தரப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வேலூர் மாநகர தி.மு.க-வினருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருந்தார். ‘மக்கள் சேவையில் ஏ.சி.எஸ்’ என்ற வாசகத்துடன் ஏ.சி.சண்முகம், தாமரைச் சின்னம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும் டி-சர்ட்டை கவுன்சிலர் மம்தா குமார் அறிமுகப்படுத்துவதைபோன்ற படங்களும் வெளியாகியிருந்தன. பின்னர் அவர் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க-வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கும் ஆண் கவுன்சிலராலும் மாநகர தி.மு.க-வும், மாமன்றமும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *