நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை; 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்?! – பாஜக பக்கம் செல்லும் நவீன் பட்நாயக்? |Amit Shah confers with leaders in Delhi again till midnight to finalize Maharashtra candidates

65dd4885c1fe1.jpg

மாநில கட்சி தலைவர் சந்திரசேகர் பவன்குலேயை வார்தா தொகுதியில் நிறுத்தவும், மகாராஷ்டிராவில் புதுமுகங்கள் 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கவும் பா.ஜ.க.தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வாரத்தில் பா.ஜ.க மேலும் 150 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய கூடுதல் நேரம் கிடைக்கும் என்று பா.ஜ.க கருதுகிறது. காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட இருக்கிறது. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்கிறார்கள். ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்றும் இம்முறையும் இரண்டு தொகுதிகளில் அவர் இறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒடிசாவில் கடந்த 15 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டு வந்த பிஜு ஜனதா தளம் வரும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நவீன் பட்நாயக் இன்று கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பா.ஜ.க-வுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஒடிசா பா.ஜ.க தலைவர் மன்மோகன் சமால் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் கட்சி தலைவர்களுடன் ஒடிசா கூட்டணி குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் வந்தது. கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள ஒடிசாவில் 21 தொகுதியில் 12 தொகுதியில் பிஜு ஜனதா தளமும், 8 தொகுதியில் பா.ஜ.க வும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *