திடீரென தொடங்கிய மதுரை எய்ம்ஸ் பணிகள்! – உண்மையிலேயே தொடருமா, தேர்தல் நாடகமா?! | Madurai AIIMS construction works commence as lok sabha elections nearing

65b961a23f87a.jpg

இந்த நிலையில், ‘மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் கண்கட்டி வித்தையை நடத்த ஆரம்பித்திருக்கிறது’ என்ற தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. மேலும், உண்மையிலேயே எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளைத் தொடங்குகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன்.

மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன்

மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன்

‘கடந்த வாரம்தான் பிரதமர் மோடி மதுரைக்கு வந்துசென்றார். எனவே, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உண்மையிலேயே தொடங்குவதாக இருந்தால், பிரதமர் மோடி தலைமையில் அதை பிரமாண்டமாக செய்திருக்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ, மதுரை எம்.பி-க்கோ, அந்த இடம் அமைந்திருக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூருக்கோ தெரியாமல், யாரையும் அழைக்காமல் ஏன் பூமிபூஜை நடத்துகிறார்கள்?’ என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். நடைமுறையில் அதை எந்தளவுக்கு நிறைவேற்றுவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. தேர்தலுக்காக இல்லாமல், உண்மையில் பணிகள் நடக்க வேண்டும் என்பதே அரசியலை தாண்டி மக்களின் எண்ணமாக இருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *