உதயநிதி வழக்கு: `சாதியக் கொடுமைகளுக்கு வர்ணாசிரம தர்மத்தை பழி கூற முடியாது’ – சென்னை உயர் நீதிமன்றம் | chennai high court on cases filed against ministers and mp

Gridart 20240306 094059044.jpg

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 2023-ம் ஆண்டு `சனாதன ஒழிப்பு மாநாடு” நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று கூறியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார்.

உதயநிதி, சேகர் பாபு, ஆ.ராசா

உதயநிதி, சேகர் பாபு, ஆ.ராசா

தி.மு.க எம்.பி, ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால், எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், “அமைச்சர்களுடைய கருத்துகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, பிழையான, அரசியல் சட்டத்திற்கு முரணான தவறான தகவல்களை கொண்டதாக இருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *