Tamil News Live Today: சனாதனம் குறித்த பேச்சு… உதயநிதி, சேகர் பாபு ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு! | Tamil News Live Today live updates dated 06-03-2024

6389897ed9608.jpg

உதயநிதி, சேகர் பாபு ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு!

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ-வாரண்டோ வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி “சனாதன ஒழிப்பு மாநாடு” என்ற  மாநாடு நடைபெற்றது. இதில் சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்படன.

உதயநிதி - சேகர் பாபு

உதயநிதி – சேகர் பாபு

ஒன்பது நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின் நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *