புதுச்சேரி சிறுமி கொலை: “ஒரு தாயாக இதயம் வலிக்கிறது… நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” – குஷ்பு | Being a mother, my heart bleeds, NCW member kushboo said in puducherry minor girl rape and murder issue

6361145b201fa.jpg

இந்தக் கொடூர சம்பவத்தால் கோபத்திலிருக்கும் புதுச்சேரி மக்கள், போலீஸாரின் அலட்சியமும் இதற்கொரு காரணம் என்று குற்றம்சாட்டி, குற்றவாளிகளுக்கு கடுமையானத் தண்டனையளிக்க வேண்டும் எனப் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதோடு, சிறுமியின் பெற்றோர் உடலை வாங்க மறுப்பதால், முதலமைச்சரே நேரடியாகப் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறுமி கொலையை கண்டித்து சாலை மறியல்

சிறுமி கொலையை கண்டித்து சாலை மறியல்

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு, ஒரு தாயாக இதயத்தில் ரத்தம் கசிவதாகவும், குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து குஷ்பு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த நேரத்தில் என் இதயம், புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரிடத்தில் இருக்கிறது. இத்தகைய சம்பவம் எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது. இந்த சம்பவத்தால், ஒரு தாயாக என் இதயத்திலிருந்து ரத்தம் கசிகிறது…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *