புதுச்சேரியில் களமிறங்குகிறாரா அமைச்சர் நிர்மலா சீதாராமன்?! – வெற்றி வாய்ப்பும் கள நிலவரமும்..! | Puducherry BJP cadres are exited over Union finance minister Nirmala Sitharaman who is going to contest

2jb3juk Nirmala Sitharaman Press Conference Ani 650 650x400 01 February 22.webp.png

ஆனால் தமிழிசை புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு, உள்ளூர் பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரையும், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் எழுதிக் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு `இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ஜ.க போட்டியிடும். ஒருசில நாட்களில் வேட்பாளரை அறிவிப்பார்கள்’ என்றார் முதல்வர் ரங்கசாமி.

இதுகுறித்து, “என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆளும் கட்சியாக இருந்தாலும், வி.சி.க மற்றும் சிறுபான்மையின மக்களின் சுமார் இரண்டு லட்சம் நிலையான வாக்குகள் காங்கிரஸ் பக்கம் இருக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட ரங்கசாமியின் வேட்பாளர் 2,47,956 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு லட்சம் வாக்குகளில் இருந்துதான் எண்ணிக்கையே தொடங்கும். ஆனால் பா.ஜ.க-வின் வாக்குகள் ஒன்றிலிருந்து துவங்க வேண்டும்.

புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு

 அதேசமயம், மத்திய அமைச்சர் என்ற தகுதியுடன், ஆளும் கட்சியின் பலத்துடன் நிர்மலா சீதாராமன் களமிறங்கினால், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் 22 எம்.எல்.ஏக்களும் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள். அத்துடன் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தேர்தல் பிரசாரம், கணிசமான வன்னியர் சமூக வாக்குகளை அறுவடை செய்து கொடுக்கும். ஆனாலும் இரண்டு தரப்புக்குமே வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேசமயம், கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 2022-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு, ஜூன் 2028 வரை பதவிக் காலம் இருக்கிறது. அத்துடன் இதுவரை தேர்தலையே சந்திக்காமல் மத்திய அமைச்சராக இருக்கும் அவர், இந்த தேர்தலை எதிர்கொள்வாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *