“டெபாசிட் பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்..!" – அண்ணாமலைக்கு அனிதா ராதகிருஷ்ணன் சவால்

Img 20240306 Wa0005.jpg

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர்,  “குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தார். ராக்கெட் ஏவுதளத் திட்டத்தை வரவேற்று நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டேன். அதை வடிவமைத்தவர் சிறு தவறு செய்துவிட்டார். அதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி அரசியல் செய்கிறார்.  

பொதுக்கூட்டம்

நான் அண்ணாமலையிடம் சொல்கிறேன், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் எங்கள் தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு டெபாசிட் வாங்குங்கள்.  நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.  என் சவாலை ஏற்றுக்கொள்ள அண்ணாமலை தயாரா? அண்ணாமலை, பிரதமரை சீண்டி விடுகிறார். நீங்கள் சீண்டி விட்டால் எங்களை தூக்கில் போட்டு விடுவார்களா?. நாடு கடத்துவார்களா?  எதுவும் நடக்காது. மாநில அரசின் மீது  தேவையில்லாத குற்றச்சாட்டுகளை  முன் வைக்கும் மோடி, நீங்கள் ஒரு பிரதமர்தானா?

தி.மு.க எவ்வளவு பெரிய கட்சி. அதை அழிக்க முடியுமா?  தொட்டுப் பார்க்க முடியுமா?  பா.ஜ.க-வில் யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?  மாநில அரசால் மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால் அதை எதிர்த்துக் கொடி பிடிப்பவர்கள்தான் பா.ஜ.கவினர். இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் மெகா திட்டப்பணிகள் நடக்கிறது.

பொதுக்கூட்டம்

நாங்கள் இந்துக்கள்  என்று சொல்லக்கூடிய பா.ஜ.க வினரால் அமைச்சர் சேகர் பாபுவை தொட்டுப் பார்க்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி பற்றி பேச வேண்டியதே இல்லை.  வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு  அந்த கட்சி இருக்குமா என்பது சந்தேகம். ஓ.பன்னீர்செல்வத்தை  யார் என்று உங்களுக்கு தெரியும். நாம் எடுக்க வேண்டிய சபதம் என்னவென்றால் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே”  என அவர் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *